Book Details
BACK
Title |
மணிமேகலை வழக்குச் சொல்லகராதி |
Author |
முனைவர். க. கமலாஏஞ்சல் பிரைட் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2023 |
Language |
Tamil |
Book ISBN |
978-81-960989-1-9 |
Number of Pages |
457 |
Book Price |
Rs.800.00 |
About the Book:- |
"ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்க எரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே. மணிமேகலை 11: 92-96 ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந்நெறி வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கையாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர். பசிப்பிணி தீர்க்கும் இப்பேரறத்தினைச் சாத்தனார் மணிமேகலையில் அறிவுறுத்தியுள்ளார். மக்கள், தேவர் ஆகிய இருவர்க்கும் உயரிய அறமாக விளங்கும் அறம் பசிப்பிணி தீர்த்தல் ஒன்றேயாம். சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய உலகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தில் உள்ள சொற்கள் இன்றும் வட்டார வழக்குச் சொற்களாக வழங்கப்படுகின்றன. தமிழின் தொன்மையையும் வளத்தையும் வெளிக்கொணரும்வண்ணமும் பேச்சுவழக்குச் சொற்கள் அழிந்து போகாவண்ணமும் எழுந்ததே இவ்வகராதி. |