Book Details
BACK
Title |
திருப்புடைமருதூர் ஓவியங்கள் |
Author |
சா. பாலுசாமி |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2023 |
Language |
Tamil |
Book ISBN |
978-81-960989-7-1 (HB) |
Number of Pages |
556 |
Book Price |
Rs.3o00.00 |
About the Book:- |
'ஓவியம்’ ஏனைய கலை வடிவங்களுள்ளும் ஒப்பற்ற சிறப்புடையது எனவும் கலைகளின் அரசன் எனவும் போற்றப்படுகிறது. மனித நாகரிகத்தின் மிகத் தொடக்கக் காலத்திலேயே, தன்னைச் சூழ்ந்திருக்கும் பொருள்களின் மீது தனக்கு விருப்பமானவற்றை, இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைந்து அவற்றை அழகியல் கலந்த கலைப் பொருட்களாக்கினான் மனிதன். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அன்றாட வாழ்வில் தான் பயன்படுத்திய பானைகளின் மீது மனிதனது தூரிகை பல்வேறு வடிவங்களை ஓய்வின்றித் தீட்டியது. மிகவும் தனித்தன்மைகள் கொண்ட அவற்றின் கூறுகள், மனிதக் குழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்ததை அறிய உதவின. கட்டடச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் மிகவும் கவனத்திற்குரியனவாகும். ஓவிய மரபிற்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் பெருந்துணையாக விளங்கவிருக்கும் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தனிச்சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. கலை வரலாற்று அறிஞராகவும், சிறந்த சுவரோவிய ஆய்வு வல்லுநராகவும் விளங்கும் முனைவர் சா. பாலுசாமி அவர்கள் திருப்புடைமருதூர் ஓவியங்களை அரிதின் முயன்றுஆவணப்படுத்தியுள்ளார். மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆவணப்படுத்தும் நெறிமுறையை முழுமையாகக் கையாண்டும் திருப்புடைமருதூர் கோயில் ஓவியங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அங்குள்ள ஓவியங்களில் ஓர் அங்குலத்தைக்கூட விடாமல் இந்நூலில் விவரித்துள்ளார். ஓவியங்கள் குறித்த தன் கருத்து முடிவுகளை முன்வைக்க, போதுமான சான்றுகளையும் அவர் முன்வைத்துள்ளார். திருப்புடைமருதூர் ஓவியங்கள் மூலமாக, கி.பி. 1532ஆம் ஆண்டு விஜயநகர அரசிற்கும் திருவிதாங்கூர் அரசிற்கும் இடையே நடந்த வரலாற்று நிகழ்வான ‘தாமிரபரணிப் போர்’ பற்றி அடையாளம் கண்டு வெளிப்படுத்தியிருப்பது இந்நூலாசிரியரின் பெரும் வரலாற்றுப் பங்களிப்பாகும் |