Book Details
BACK
Title |
கலித்தொகையில் நாடகக் கூறுகளும் காட்சி மொழியும் |
Author |
கு. முருகேசன் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2023 |
Language |
Tamil |
Book ISBN |
ISBN 978-81-960989-8-8 (HB) |
Number of Pages |
284 |
Book Price |
Rs.600.00 |
About the Book:- |
சங்க இலக்கிய அகத்திணை மரபென்பது, தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலி கூற்று, நற்றாய் கூற்று, பாங்கன் கூற்று, பாணன் கூற்று, கண்டோர் கூற்று எனக் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். இக்கூற்றுகளானது ஓரங்க நாடகம் முதலான பல அங்கங்களுடைய நாடகப் பாங்கினைக் கொண்டதாகும். இக்கூற்று என்னும் சொல்லே கூத்து எனும் நாடக மரபாயிற்று என்பர். தமிழின் தொடக்கக்கால நாடகமரபு, கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தமைக்குச் சான்றாகச் சங்க இலக்கிய அகமரபுப் பாடல்களைக் குறிப்பிடலாம். இவை போன்ற கருத்துகளை அறிந்து கொள்வதற்கும், பண்டைய நாடக மரபினைப் பற்றி ஆய்வதற்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். இந்நூலில் நாட்டார் வழக்காற்றுக் கூறுபாடுகளுடன், துள்ளலோசையால் சிறப்புப் பெற்ற, கலிப்பாக்களால் அமைந்த, நாடகத் தன்மையினை வெளிப்படுத்தும் அகத்திணைப் பாடல்களான கலித்தொகையின் கூற்றமைப்பில் ஒரு பாடலுக்குள்ளாகவே பலர் நிகழ்த்தும் கூற்றுப் போக்கினைக் கொண்ட நாடகச் சிறப்பினைக் காண இயலும். அத்தகைய கலித்தொகைப் பாடல்களில் அமைந்த நாடகப் பாங்கினையும், காட்சியினையும் இந்நூலால் அறிய இயலும். தமிழ் நாடகப் போக்கினைக் கிரேக்க நாடகங்களோடும் வடமொழி நாடகங்களோடும் ஒப்பிட்டுள்ளமையால் பண்டைய நாடக மரபினைப் பற்றி நன்கறிய இந்நூல் பெரிதும் உதவும். |