Book Details
BACK|
Title |
செவ்வியல் நூல்களில் அளவைகள் |
|
Author |
ப. சத்யா |
|
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
|
Publish Year |
2023 |
|
Language |
Tamil |
|
Book ISBN |
978-81-960989-5-7 (HB) |
|
Number of Pages |
264 |
|
Book Price |
Rs.600.00 |
|
About the Book:- |
இந்நூல் எண்ணல், முகத்தல், நிறுத்தல், நீட்டல் மற்றும் கால அளவைகள் முதலியவற்றைத் தமிழ்ச் செவ்வியல் நூல்களில் கண்டறிந்து ஒருசேர விளக்கி ஆராய்கிறது. வெள்ளம், ஆம்பல், நெய்தல், குவளை போன்ற பேரெண்களைக் கொண்ட எண்ணல் அளவைகள் கணித அறிவியலில் தமிழர்கள் தனித்தன்மையுடையவர்களாகச் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. மேலும், ஓர் எண்ணை வைத்து அதனைக் கூட்டவும், வகுக்கவும், பெருக்கவும் என வாழ்வியலின் அடிப்படையில் தோன்றியிருக்கும் பண்பாட்டு முறையைத் தொல்காப்பியம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களிலிருந்து (41) பதிவுசெய்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். சங்க காலந்தொட்டு அளவைமுறைகளுக்குத் தக்கவாறு தங்களது வாழ்க்கைச் சூழலில் படிப்படியாக அனுபவத்தின்வழி மேற்கூறப்பட்ட ஒவ்வொன்றிற்கும் அளவுகளைக் கணக்கிட்ட தமிழர்களின் அறிவு உலகிற்கு முன்னோடியானது என்பதை மெய்ப்பிக்கிறது. சான்றாக, அரசாட்சி செய்யக்கூடிய அரசன் மக்களிடம் சமநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் துலாக்கோல் எனும் நிறுத்தல் அளவையின் சொல்லாடலை ஒப்புமைப்படுத்தி இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. தமிழர் தம் வேளாண் மரபுகளில் சில தானியங்களையும் உற்பத்திப் பொருட்களையும் அளவிடுவதற்காகக் கலம், தூணி, பதக்கு, நாழி, உரி, உழக்கு, அம்பணம், பனை, வட்டில் போன்ற முகத்தல் அளவைகள் பயன்படுத்திய முறைகளைத் தெளிவுபடுத்தும் ‘செவ்வியல் நூல்களில் அளவைகள்’ எனும் இந்நூல் ஓர் ஆவணமாகத் திகழ்கிறது. மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்கடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது (சிலம்பு.கொலைக்களக்காதை.166-169) எட்டு எண்ணல் அளவையும், கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். (குறள்.1005) கோடி எண்ணல் அளவையும் இவ்வுலகில் வாழும் மனித சமுதாயத்திற்கு உணர்த்தும் அறங்களாகக் காட்சிப்படுத்துகிறது இந்நூல். |









