Book Details
BACK
Title |
பத்துப்பாட்டில் இசை |
Author |
கூ. மு. புவனேஸ்வரி |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2023 |
Language |
Tamil |
Book ISBN |
978-81-962917-1-6 (HB) |
Number of Pages |
260 |
Book Price |
Rs.500.00 |
About the Book:- |
பண்டைத் தமிழர் இசைப் புலமையில் சிறந்து விளங்கினர். இதனைப் பத்துப்பாட்டு நூல்கள் தரும் இசைச்செய்திகள் வாயிலாக நன்கறியலாம். சங்ககாலத்தில் இசைக் கலைஞர்கள் நிரம்ப ஓதிய புலமை, பல்துறை முற்றிய அறிவு, இசைக்கலை நுட்பம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர். இவர்கள் நிலைத்த புகழுடன், சொல்வன்மை மிக்கவர்களாய் வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பத்துப்பாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ள இசைச்செய்திகள் சான்றாதாரங்களாக விளங்குகின்றன. இவர்கள் தமிழிசை வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமை அறிதற்குரியது. பல பண்களைப் பண்ணின் சுவையுணர்ந்து இசையமைத்து, அவற்றை மிடற்றிசை வாயிலாகப் பாடியும், கருவி இசையில் இசைக்கரணம், இசை எழால் முதலான இசை நுட்பங்களுடன் இசைத்தும், சுருதி, தாளம், பண்கள் பாடவேண்டிய பொழுது என இசைக்குரிய அனைத்துச் சிறப்புகளும் ஒருங்கமையப்பெற்று இசையரங்குகளில் இவர்கள்தம் இசையாற்றலை, புலமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு பத்துப்பாட்டு நூல்களில் இடம்பெற்றிருக்கும் இசைக் குறிப்புகளையும், நுணுக்கங்களையும் இந்நூல் ஆவணம் செய்கின்றது. |