Book Details
BACK
Title |
திருவள்ளுவர் திருக்குறள் மூலமும் உரையும் |
Author |
ப. மருதநாயகம் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-19249-27-5 |
Number of Pages |
476 |
Book Price |
Rs.500.00 |
About the Book:- |
திருக்குறளின் ஈடு இணையற்ற சிறப்பை எளிதில் உணர்ந்துகொண்ட மேலைநாட்டு அறிஞர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதனைத் தங்கள் மொழிகளுக்கு எடுத்துச்செல்லத் தலைப்பட்டனர். ஏரியல் என்னும் அறிஞர் “திருக்குறள் மனித இனத்தின் மிகவுயர்ந்த, மிகத்தூய்மையான வெளிப்பாடுகளில் ஒன்று என்றும், தலையாய சொற்சிறப்பிலும் அறமேம்பாட்டிலும் கிரேக்கர்களுக்கு ஹோமர் எவ்வாறோ, அவ்வாறான மீவுயர் நிலையில் தமிழர்களுக்கு வாய்த்தவர் வள்ளுவர்" என்றும் பாராட்டுகிறார். ஆல்பர்ட் ஸ்வெய்ட்சர் (Albert Schweitzer) எனும் பேரறிஞர், திருக்குறள் எனும் நூலே, அன்பாகிய வாழும் அறம் (living ethic of love) ஆகும். அது எளிய, அறவுணர்வுகொண்ட மாந்தரின் குறிக்கோளைத் தவறில்லாது அழுத்தமாக எடுத்துச்சொல்லது. மனிதன் தன்னிடமும், உலகத்தாரிடமும் நடந்துகொள்ள வேண்டிய பண்பாட்டின் பலதரப்பட்ட சிக்கல்கள் பற்றிய அதன் கூற்றுகள் நல்லறிவுக்கேற்றவை; உயர்ந்தவை. பேரறிவின் வினைவாகிய இத்தகைய அறக்கோட்பாடுகளின் தொகுதியை, உலக இலக்கியத்தில் வேறெங்கும் காண்டல் அரிது, குறள் கூறும் செயல்மிகு வாழ்வால் பெறும் இன்பம் பற்றிய கருத்துகள், வாழ்க்கை ஏற்பிற்கும் உலகின் உறுதிப்பாட்டிற்கும் சாட்சியம் அளிப்பவை' என்று கூறுவார் |