Book Details
BACK
Title |
பள்ளிப்பட்டு இருளர் பழங்குடி மக்களின் வட்டார வழக்குச்சொல்லகராதி |
Author |
சு. எழுமலை |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-960989-2-6 |
Number of Pages |
352 |
Book Price |
Rs.600.00 |
About the Book:- |
ஒரு சமூகத்தின் செயல்பாடுகளிலிருந்து அச்சமூகத்தின் பண்பாட்டை அறியலாம். மக்களின் எண்ணங்கள் அவர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. அம்மக்களைச் சார்ந்த பண்பாடு அவர்களின் தேவையை நிறைவேற்றுவதாக அமைகிறது. ஒரு சமுதாயம் சிறந்த முறையில் அமைய அச்சமூகம் கொண்டுள்ள பண்பாடு அதற்கு அடிப்படையாக அமைகிறது. மக்களின் வாழ்க்கை முறையில் பண்பாடு என்ற ஓர் அமைப்பு விளங்குவதால்தான் மக்கள் இணக்கமாக வாழ முடிகிறது. பண்பாட்டின் வழி மக்களின் உள்ளத்து உணர்வுகளை அறியலாம். விலங்கு நிலையிலிருந்த மனித இனம் பண்பட்ட சமூக வாழ்வினை மேற்கொண்டு வாழும் நிலையிலும் மக்களுடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலிருந்தும் வெளிப்படுவது பண்பாடாகும். எனவே ஓர் குறிப்பிட்ட சமூக மக்களின் சிறு அசைவுகளையும் பண்பாடு உள்ளடக்கியதாக விளங்குகிறது. இருளர் இன மக்களின் எண்ணங்கள் வாழ்க்கைமுறை. சடங்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் பண்பாடும் அமைகிறது. இதில் அம்மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிலைகளும் அடங்கும். இப்பழங்குடியினர் தனித்தப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தாலும் உயர்ந்த பண்புடையவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் "பள்ளிப்பட்டு இருளர் பழங்குடியின மக்களின் வட்டார வழக்குச் சொல்லகராதி" எடுத்துரைக்கிறது. |