Book Details
BACK
Title |
சீவக சிந்தாமணி-சொல்லடைவு |
Author |
வ. ஜெயதேவன் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-19249-58-9 |
Number of Pages |
393 |
Book Price |
Rs.800.00 |
About the Book:- |
சீவகனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற காப்பியமே சீவகசிந்தாமணி. திருத்தக்க தேவர் எனும் சமண முனிவர் இக்காப்பியத்தை இயற்றினார். விருத்தப்பாக்களால் எழுதப்பட்ட இந்நூல் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டுள்ளது. முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம். இறுதி இலம்பகம் முத்தி இலம்பகம் ஆகும். சீவகன் எட்டு பெண்களைத் திருமணம் செய்வதால் இந்நூல் மணநூல் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நூலில் காப்பியத் தலைவனின் அழகு, வீரம், அறப் பண்பு ஆகியவை சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இத்தகு சிறப்புமிக்க காப்பியத்திற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடாக வரும் இச்சொல்லடைவு பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. |