Book Details
BACK|
Title |
கைந்நிலை மூலமும் உரையும் |
|
Author |
சே.கரும்பாயிரம் |
|
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
|
Publish Year |
2024 |
|
Language |
தமிழ் |
|
Book ISBN |
978-81-19249-48-0 |
|
Number of Pages |
227 |
|
Book Price |
Rs.300.00 |
|
About the Book:- |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனச் செம்பதிப்பு வரிசையில் இது ஆறாவது வெளியீடாகும். இந்நூலில் சிறந்த பாடல்கள் பல உள்ளன. குறிஞ்சி நிலத்திலுள்ள செங்காந்தள் மலரைக் காட்டுத் தீ எனக் கருதி யானையொன்று பயந்து ஓடியதை, 'காந்த ளரும்புகை யென்று கதவேழ மேந்தன் மருப்பிடைக் கைவைத் தினனோக்கிப் பாய்ந்தெழுந் தோடும்' (9:1-3) என்று பாடலடிகள் குறிப்பிடுகின்றன. அத்தகைய இந்நூலைப் பலரும் பதிப்பித்துள்ளனர். ஆயினும் ஓலைச் சுவடிகள், தாள் சுவடிகள், சுவடிப் பதிப்புகள், உரையாசிரியர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றின் துணைகொண்டு மூலபாடத்தை உறுதிசெய்து செம்பதிப்பாகக் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். இந்நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் கைந்நிலை உரை, ஓலைச் சுவடிகள் - சிதைவும் முறிவும், சுவடித் திறப்பு, பிழைப்பாடப் பட்டியல், ஒப்புமைத் தொடர்கள், சொல்லடைவு, மீளவரும் தொடர்கள், கலைச்சொற்கள், பிற பதிப்புகள் ஒப்பீடு, மக்கள், நிலம், நீர்நிலை, விலங்கு, பறவை, தாவரம், ஆடை, அணிகலன், ஒப்பனை, நிறம், விளி, ஒலிப் பொருண்மை ஆகியவற்றின் பெயர்கள், அருஞ்சொற் பொருள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன. கைந்நிலை குறித்த பாடத் தேர்வை உறுதிசெய்து செம்பதிப்பாக இந்நூல் வெளிவருவதால் ஆய்வாளர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் எனலாம். |









