Book Details
BACK
Title |
சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் |
Author |
இலா.குலோறியா சுந்திரமதி |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-970298-9-9 |
Number of Pages |
540 |
Book Price |
Rs.1000.00 |
About the Book:- |
சங்க இலக்கியம் தமிழர்தம் இன்றியமையா இலக்கியக்கருவூலம். நாம் பெற்றிருக்கும் தமிழ் நூல்களில் மிகப் பழைமையானது. தனித்துவம் வாய்ந்தது. இதனைக்கற்கும் அனுபவம் சுவை மிகுந்தது. இலக்கியப்படைப்புகள், அதிலும் சிறப்பாகச் செவ்விலக்கியப்பண்பு கொண்ட படைப்புகள் சிக்கலான அமைப்பை உடையவை. ஓர் இலக்கியத்தின் அமைப்பை அதில் இடம்பெறும் கூறுகளைப் பகுத்தாய்தல் அதனது சுவையை, சுவை அளிக்கும் கூறன்களை இனம் கண்டு கொள்ள உதவுகின்றது. இலக்கியத்தை இலக்கியமாகவே கற்கும் நெறியே பகுப்பாய்வு அணுகுமுறைக்கு அடிப்படையானதாக அமைகின்றது. சங்க இலக்கியமும் இத்தகைய பகுப்பாய்வின் வாயிலாக அணுகப்படும்போது அதனைப்புரிந்து கொள்ளுதலும் அதன் சுவையை அனுபவித்தலும் மிகுகின்றது. 'சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் - பகுப்பாய்வு அணுகுமுறை' என்ற இந்நூல் இத்தகைய பகுப்பாய்வு நெறியில் சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களை நோக்குகின்றது. சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பின்புலத்தில் அமையும் எழுத்தாழ 485 பாடல்கள் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பாடியோர் ஏறத்தாழ 170 பேர். குறிஞ்சிக்குக் கபிலன் எனப் பெயர்பெற்ற கபிலர், பரணர் என்போர் இங்குச் சிறப்புப் பெறுகின்றனர். ஒரு பாடல் வாயிலாகவே தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்றோரும் இங்கு உண்டு. இந்நூல் முன்னுரை, குறிஞ்சித்திணைப் பாடல்களின் பகுப்பாய்வு, குறிஞ்சித்திணைப் புலவர், தொகை நோக்கில் குறிஞ்சித்திணைப் பாடல்கள், கலிதை நோக்கில் குறிஞ்சித்திணைப் பாடல்கள், முடிவுரை என்ற பகுதிகளைக் கொண்டு அமைகின்றது. இதன் மையக்கூறாக அமையும் குறிஞ்சித்திணைப் பாடல்களின் பகுப்பாய்வு என்ற பகுதி குறிஞ்சித்திணைப் பாடல்களை நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரித்து ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இப்பிரிவுகளின்கீழ் அமையும் துறைகளில் அமையும் பாடல்களை உருவமைக்கும் வெளியீட்டுக்கூறன்கள், பொருட்கூறுகள் என்பவற்றை இனங்கண்டு அவை ஒன்றோடொன்று இயைபுறப்பொருந்தும் நிலை வெளிக்கொணரப்படுகின்றது. பாடல்களுக்குச் சுவையூட்டும் உள்ளுறை, இறைச்சி, முரண், அடுக்கு, உவமை போன்றவை குறித்து இறுதி இயல் ஆராய்ந்துள்ளது. |