Book Details
BACK
Title |
தமிழ் வழக்காற்றுச் சொற்கள் களப்பணிப் பொது வினாநிரல் |
Author |
ச. மனோகரன்(பதிப்பாசிரியர) |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-19249-47-3 |
Number of Pages |
441 |
Book Price |
Rs.800.00 |
About the Book:- |
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தாங்கள் வாழும் பகுதிகளை அந்தந்தச் சுற்றுச் சூழலுக்குக்கேற்ப பிரித்தத் தமிழர்கள் மொழியை மட்டும் பிரிக்காமல் தாங்கள் பேசிய மொழியை தமிழ்மொழி என்றே அழைத்தனர். தற்காலத்தில் பேசப்படும் தமிழ்மொழிச் சங்ககாலத்தில் பேசப்பட்டத் தமிழ்மொழியின் தொடர்ச்சியேயன்றி தனியாகத் தோன்றிய மொழி கிடையாது. சங்ககாலத் தமிழின் சொற்களையும் இலக்கணக் கூறுகளையும் தற்காலத்தில் பேசப்படும் பேச்சுவழக்கிலும் காணலாம். காலத்தால் ஒலியமைப்பிலும் உருபன் அமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய மாற்றங்களின் மொழிக்கொள்கைகளையும், மாற்றங்கள் ஏற்பட்ட காலக்கட்டங்களையும் ஆய்வுகளின் வாயிலாகக் கூறமுடியும். பலமாற்றங்களுக்கு நடுவிலும் சொல் மற்றும் இலக்கணக்கூறுகளின் தொடர்ச்சியை இன்றும் காணமுடிகிறது. உதாரணமாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சுவழக்கில் முன்னிலை சுட்டுப்பெயர் நீ(உன்) "முன்னிலை, ஒருமை மற்றும் மரியாதை இல்லாச்சொல்", நீம்(உம்-) "முன்னிலை, ஒருமை மற்றும் வயதானவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் மரியாதை இல்லாச்சொல்", நீர்(உம்-) 'முன்னிலை, ஒருமை மற்றும் வயதானவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் சமமரியாதைச்சொல்", நீங்கள்(உங்கள்-) "முன்னிலை, பன்மை மற்றும் முன்னிலை, ஒருமை மரியாதையான சொல்" என நான்கு வகைகளில் காணப்படுகின்றது. இதில் நீம்(உம்-) என்றச் சொல் சங்ககால வழக்காகும். பேச்சுவழக்கு என்பது ஐரோப்பியர்களின் காலம் வரை ஆய்வுக்கும் எழுத்துவழக்கிற்கும் அப்பாற்பட்ட ஒரு வழக்காகவே இருந்து வந்தது. கி.பி. 16ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பின் பேச்சுவழக்கிற்கென்று ஒரு தனியிடம் கொடுக்கப்பட்டு, மொழியியல் ஒரு தனித்துறையாக நிறுவப்பட்டப் பின்பு, பேச்சுவழக்கும், பேச்சுவழக்கின் கூறுகளான வட்டாரவழக்கு, சமுதாயவழக்கு, தொழில்வழக்கு போன்ற வழக்குகள் மொழியியல் ஆய்வின் முக்கியமான அங்கமாகத் திகழ்கின்றது. தமிழ்மொழி பேசும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வட்டாரங்களைப் பகுத்து அங்கு வாழும் பற்பலச் சமுதாயத்தினரையும், அவர்களின் பாரம்பரியத் தொழில்களையும் பட்டியலிட்டு ஒட்டுமொத்தமாக ஒரு கட்டுக்கோப்பான வினாநிரல் மூலம் களப்பணிச் செய்து வட்டார, சமூக மற்றும் தொழில் வழக்குச் சொற்களைச் சேகரித்துத் தமிழ் மொழியின் சொல் வளத்தையும், பொருள் வளத்தையும், கலாச்சார மற்றும் பண்பாடுகளையும் விரிவாகவும், தெளிவாகவும் ஒன்றுதிரட்டும் ஆய்வுகள் இன்றுவரை நடத்தப்படவில்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இதற்கென ஒரு கட்டுக்கோப்பான வினாநிரலைத் தயாரித்தது. தமிழ் வழக்காற்றுச் சொற்கள் களப்பணிப் பொது வினாநிரல் என்னும் இந்நூல் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் களஆய்வு மேற்கொள்பவர்களுக்கும் உதவிபுரியும் என்பது திண்ணம். |