Book Details
BACK
Title |
சங்ககால மக்கட் பெயர்க் களஞ்சியம் |
Author |
பா. இறையரசன் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2022 |
Language |
Tamil |
Book ISBN |
978-93-81744-82-6 (HB) |
Number of Pages |
544 |
Book Price |
Rs.700.00 |
About the Book:- |
தமிழ்மக்களின் பெயர்கள் அனைத்தும் இயற்கையோடு இயைந்தவை. பெயர்ச் சொற்கள் அனைத்துமே காரணப் பெயர்களாய்ச் சிறப்புடன் விளங்குகின்றன. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (தொல்.பெய.1). "மொழிப்பொருட் (தொல்.உரி.96) காரணம் விழிப்பத் தோன்றா" என்னும் இரண்டு நூற்பாக்களும் தமிழின் தொன்மையை நிறுவுவன. அந்தஅடிப்படையில் சங்க காலத் தமிழ் மக்களின் பெயர்களும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் உணர்த்துவன. இக்களஞ்சியத்தில் சங்க கால மக்கட் பெயர்கள் சங்க நூல்களிலிருந்து தொகுக்கப் பெற்றுள்ளன. இப்பெயர்களில் அரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், பொதுமக்கள் என அனைவருடைய பெயர்களும் அடங்கும். சங்க இலக்கியப் பதிப்புகளில் காணப்பெறும் புலவர் அரசர் மக்கள் பெயர்கள் அனைத்தும் அகரவரிசையில் பாடவேறுபாடுகளுடன் குறிக்கப்பெற்றுள்ளன. |