ஏலாதி அறிமுகம்:-
இதனை இயற்றியவர் கணிமேதாவியார். அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது. ஏலம் (ஒரு பங்கு), இலவங்கப்பட்டை (2 பங்கு), நாககேசரம் (3 பங்கு), மிளகு (4 பங்கு), திப்பிலி (ஐந்து பங்கு), சுக்கு (ஆறு பங்கு) ஆகிய அறுவகைப் பொருளையும் மருத்துவ அளவின்படி சேர்த்துச் செய்யப்பட்ட சூரணம் (பொடி) ஏலாதி எனப்படும்.
அவை ஆறும் சேர்ந்து உடலுக்கு வலிமை சேர்ப்பது போல உள்ளத்திற்கு வலிமை சேர்க்கும் ஆறு கருத்துகளை ஒவ்வொரு செய்யுளிலும் கொண்டுள்ள நூல் ஏலாதி எனப் பெயர் பெற்றுள்ளது. இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 81 வெண்பாக்கள் உள்ளன. இரண்டு சிறப்புப் பாயிர வெண்பாக்கள் தனியாக உள்ளன.