நூலகச் சேவைகள்

பாவேந்தர் நூலகச் சேவைகள்:

பாவேந்தர் நூலகம் பல்வேறு வகையான நூலகச் சேவைகளை வழங்குகிறது

நூல்களைச் சுற்றுக்கு விடுதல்

(காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை)

நூல்களை வழங்குதல், திரும்பப் பெறுதல், புதுப்பித்தல், நகலெடுத்தல் முதலிய நூலகச் சேவைகள் நிறுவனப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

நூல்களுக்கான இணையவழிப் பொது அணுகல் பட்டியல் (OPAC)

(நேரம் : 24 X 7 )

OPAC என்பது Online Public Access Catalogue (இணையவழிப் பொது அணுகல் பட்டியல்) என்பதன் சுருக்கமாகும். இது நூல்கள், இதழ்கள், குறுவட்டுகள்/மீநுட்பவட்டுகள் ஆகிய நூலக வளங்களை எங்கேயும் எப்போதும் இணைய வழியில் வினவித் தேடுவதை எளிதாக்குகிறது.

மின் நூலகச் சேவை

(நேரம்: காலை 9.30 மணி முதல் 5 மணி வரை)

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நூலகப் பயனர்களுக்குத் தேவையான மின் நூல்கள், மின்னிதழ்கள், மின் நாளேடுகள், ஆய்வு அறிக்கைகள், கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகள் போன்ற பல்வேறு மின்வளங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

செய்தித்தாள் கத்தரிப்புத் துண்டுகள்:

(இந்தியச் செய்தித்தாள்கள்)

செய்தித்தாள் கத்தரிப்புத் துண்டுச் சேவையானது கல்விசார் செயல்பாடுகள், செய்திகள், அறிவிப்புகள், விளம்பரம் போன்றவற்றின் கத்தரிப்புத் துண்டுகளை வழங்குகிறது.

ஆவணச் சேவை

(நேரம்: காலை 9.30 மணி முதல் 5 மணி வரை)

ஆவணப்படுத்தல் பிரிவு நகல் எடுத்தல், ஒளிவருடல் செய்தல், தட்டச்சிடல், பக்க வடிவமைப்பு, அச்சிடல் போன்ற சேவைகளை வழங்குகிறது. பதிப்புரிமைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நகல் எடுத்தல் சேவையை நல்குகிறது.

குறுவட்டு / மீநுட்ப வட்டு உள்ளடக்கச் சேவை

(பல்லூடகச் சேவைகள்)

இதழ்களின் உள்ளடக்கச் சேவை முறையில், இது அண்மையில் பெறப்பட்ட குறுவட்டுகள் / மீநுட்ப வட்டுகளின் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது; அவற்றை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுப்புகிறது. இதனால் பயனர்கள் நூலகங்களால் பெறப்பட்ட குறுவட்டுகள் / மீநுட்ப வட்டுகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்புதவிச் சேவை

(தகவல் தேட்டம்)

நூலகம் பல்வேறு சிறந்த பார்வை நூல்களைப் பராமரிக்கிறது. கலைக்களஞ்சியங்கள், கையேடுகள், பன்மொழி அகராதிகள், ஆய்வேடுகள், பாடநூல்கள் போன்ற மதிப்புமிக்க குறிப்புதவி மூலங்கள் இதில் அடங்கும். இந்த வளங்களை நூலகத்தினுள் மட்டுமே பார்வையிட்டுக் குறிப்பெடுக்க முடியும்.

இதழ்கள் உள்ளடக்கச் சேவை

இச்சேவையில் அண்மையில் பெறப்பட்ட இதழ்களின் உள்ளடக்கங்கள், தொடர்புடைய துறையின் ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகின்றன; எனவே அவர்கள் தொடர்புடைய இலக்கியங்களைப் படிக்க நூலகத்தை அணுகலாம்.