தமிழின் தொன்மையான இலக்கிய மரபை அறிவியல் முறைப்படி பாதுகாப்பதுடன், செவ்வியல் தமிழைக் கற்றலையும் அதில் ஆராய்ச்சி மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்குடன், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய 41 செவ்வியல் தமிழ்ப் பனுவல்களைத் தடையின்றியும், உலகளாவிய முறையிலும் அணுகுவதை எளிதாக்குவதும், அதன் மூலம் தமிழில் உள்ள மிகப் பரந்துபட்ட செவ்விலக்கிய அறிவுத் தரவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மின் நூலகத்தின் நோக்கங்கள் ஆகும். இந்த மின் நூலகத்தில் 41 செவ்வியல் தமிழ்ப் பனுவல்களின் மூலப் பதிப்புகள், உரைகள், மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.