முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு அறிமுகம்:-

இந்நூல் 103 அடிகளை உடையது, ஆசிரியப்பாவால் அமைந்தது. பத்துப் பாட்டிலேயே மிகவும் சிறியது. இந்நூலை முல்லை என்றும் வழங்குவர். முல்லைப்பாட்டின் தலைவி நெஞ்சை ஆற்றுப்படுத்தி நிற்பதால் நெஞ்சாற்றுப்படை என்றும் வழங்குவர். இதனைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்.

இப்பாட்டில் பெருமுதுபெண்டிர் விரிச்சி பார்க்கும் வழக்கம், பாசறையின் அமைப்பு, பாசறையில் உள்ள பள்ளியறையின் அமைப்பு, பாகர்கள் யானைகளைப் பழக்கும் முறை, வீர மங்கையர், நாழிகைக் கணக்கர், மெய்க்காப்பாளர் போன்றோர் ஆற்றும் தொழில், பகைவரால் புண்பட்டு நின்ற போர்வீரனை நினைந்து அரசன் வருந்தும் அன்புத் திறம், தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர், கார்காலக் காட்சிகள் ஆகியவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

முல்லைப்பாட்டு தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 முல்லைப்பாட்டு (உரையாசிரியர்: நச்சினார்க்கினியர்; பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்) 1903 உரை
2 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (உரையாசிரியர்: பண்டிதர் நாகை வேதாசலம்பிள்ளை; வெளியீடு: ராமநிலய விவேகானந்த அச்சியந்திர சாலை, சென்னை) 1911 உரை