அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நூலகத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. நூலகச் சேவைகளை யார் அணுகலாம்?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரியும் கல்விசார் பணியாளர்கள், கல்விசாராப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோன்று வெளியிலிருந்து வரும் தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் இந்நூலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். 

2. நூலகப் பட்டியலை எப்படி அணுகுவது?

நீங்கள் நூலக நூற்பட்டியலை https://library.cict.in/semmozhi/index.php என்ற இணைப்பின் மூலம் அணுகலாம்.

3. உங்கள் நூலக நேரம் என்ன?

சனி, ஞாயிற்றுக் கிழமைகள், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்துத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாவேந்தர் நூலகம் இயங்கும்.

4. பாவேந்தர் நூலகத்தில் உள்ளவை எவை?

  • புத்தகங்கள்: (பொது வாசிப்பிற்காக)
  • கட்டடம் செய்யப்பட்ட நூற்றொகுதி: (இதழ்த் தொகுதிகள். இவை இரவலாக வழங்கப்படா)
  • குறுவட்டுகள் / மீநுட்ப வட்டுகள்: (எண்ணிம உள்ளடக்கங்களான இவற்றை நூலகத்திற்குள்ளேயே பார்வையிட வேண்டும். இரவலாகவோ பதிவுசெய்துகொள்ளவோ வழங்கப்பட மாட்டா)
  • அன்பளிப்பாகப் பெறப்பட்ட நூல்கள்: (இவை பொதுவான வாசிப்பிற்கு மட்டுமே வழங்கப்படும். இரவலாக வழங்கப்பட மாட்டா)
  • குறிப்புதவி நூல்கள்: (இவற்றை நூலகத்திற்குள்ளேயே பார்வையிட வேண்டும். இரவலாக வழங்கப்பட மாட்டா)
  • பாடநூல்கள்: (பாடத்திட்டங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடநூல்களை நூலகத்திற்குள்ளேயே பார்வையிட வேண்டும். இரவலாக வழங்கப்பட மாட்டா)
  • 5. குறிப்புதவிப் பிரிவில் எவ்வகையான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன?

    குறிப்புதவிப் பிரிவில் கலைக்களஞ்சியங்கள், கையேடுகள், அகராதிகள், அடைவுகள், நிலப்பட நூல்கள், காணொளி – கேட்பொலிக் குறுவட்டுகள் போன்ற அரிய தொகுப்புகள் உள்ளன.

    6. குறிப்புதவிப் பிரிவிலிருந்து நூல்களை நான் இரவலாகப் பெறலாமா?

    குறிப்புதவி நூல்கள், அரிய நூல்கள், கட்டடம் செய்யப்படாத பருவ இதழ்கள், பத்திரிகைகள் போன்றவை இரவலாக வழங்கப்பட மாட்டா.

    7. நூலகத்தில் உள்ள நூல்களின் சில பக்கங்களை நகலெடுக்க இயலுமா?

    ஆம். நகலெடுக்கும் வசதி நூலகத்தில் உள்ளது. நூலகத்தில் உள்ள நூல்கள்/பருவ இதழ்கள் ஆகியவற்றை மட்டுமே நகலெடுக்க அனுமதிக்கப்படும். வெளியிலிருந்து கொண்டுவரப்படும் ஆவணங்களை நகலெடுக்க இயலாது. நகலெடுக்க உரிய தொகை பெறப்படும்.

    8. நூலக அதிகாரிக்கு என்னுடைய கருத்துகளை/பின்னூட்டங்களை நான் எவ்வாறு வழங்குவது?

    நூலக இணையத்தளத்தில் உள்ள ‘இணையப் பின்னூட்ட அமைப்பு’ மூலம் எந்தவொரு பயனரும் தம் கருத்தைத் தெரிவிக்கலாம். நூலகச் சேவைகள் தொடர்பான அவர்களின் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் நூலகம் வரவேற்கிறது. கருத்துத் தெரிவிக்கக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்
    https://library.cict.in/feedback.html

    9. நூலகத்திற்குத் தேவையானதொரு நூலினை வாங்க நான் எவ்வாறு பரிந்துரைக்க இயலும்?

    வாசகர் நூலக அலுவலரிடமிருந்து நூல் பரிந்துரைப் படிவத்தைப் பெற்றுத் தாம் பரிந்துரைக்கும் நூலினை அதில் எழுதிக் கொடுக்கலாம். இல்லாவிடில், https://library.cict.in/downloads.html என்ற இணைய இணைப்பிற்குச் சென்று பதிவிறக்கி நூலக அலுவலருக்குப் பரிந்துரைக்கலாம்.

    10.நான் மின்வளங்களை எப்படி அணுகுவது?

    இந்த இணையத்தளத்தில் மின்வளங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், பாவேந்தர் நூலக இணையத்தளத்தில் பதிவுசெய்துகொண்ட அனைத்துப் பயனர்களும் நிறுவன மின்வளங்களை அணுக இயலும். அப்படிப் பதிவுசெய்துகொள்ளாதவர்கள் நூலகத்தைத் தொடர்புகொள்ளவும்.