சுவடிகள் அட்டவணை


banner_img

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அறிவு மையமாக மின்நூலகம் செயல்பட்டுவருகின்றது. இது நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி இலக்குகளை எளிதாக்குவதற்கும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்கும் தகுந்தவாறு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்களின் பழமை, தனித்துவம் மற்றும் நாகரிகத்தை ஆராய்வதற்காக கிபி 600 ஆம் ஆண்டைச் சேர்ந்த மொத்தம் 41 பண்டைய தமிழ் நூல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அத்தகைய பழந்தமிழ் நூல்களை சேகரித்து ஒரு சிறப்பு நூலகத்தை நிறுவியுள்ளது.

மேலும் பழந்தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஏதுவாக் அரிய பனை ஓலை மற்றும் காகித கையெழுத்துப் பிரதிகளையும் கவனமுடன் சேகரித்து வருகின்றது. இவ்வாறு கையெழுத்துப் பிரதிகளை மின்னணு மயமாக்கப்பட்டு செய்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவற்றை இணையதளத்திலும் கிடைக்க வழிவகை செய்து வருகிறது.தற்போது வரை, 2,400 பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மின்னணு மயமாக்கப்பட்டு நிறுவனத்திற்குள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அதிக தரத்துடன் ஒளிவருடல் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட மின்னணு நூலகச் செவ்வியல் சுவடிகளின் அட்டவணை.

தொல்காப்பியம் தொடர்பான செவ்வியல் சுவடிகளின் அட்டவணை
வகை செவ்வியல் சுவடிகள் பெறப்பட்ட நிறுவனம் குறுந்தகடுகள் எண்ணிக்கை
ஓலைச்சுவடிகள் & கையெழுத்துப்பிரதிகள் 1. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்,சென்னை.
2. உ.வே.சா. நூலகம், சென்னை.
3.சரசுவதி மஹால் நூலகம், தஞ்சாவூர்.
4 .திருவாவடுதுறை ஆதீனம்
5.தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.
6 .தருமபுர ஆதீனம்
7.மதுரைத் தமிழ்ச்சங்கம்
8.வெங்கடேசுவராப் பல்கலைக்கழகம்
9.பிபிலோதேகு நிறுவனம்
42
58
12
16
66
2
6
8
2
மொத்த எண்ணிக்கை 212