பாவேந்தர் நூலகம் பற்றி

அறிமுகம்:

பாவேந்தர் நூலகம் என்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட குறிப்புதவிச் சேவை அலகாகும். இது மின்னணு வளங்களில் வலுவான திரட்டல்களை உருவாக்கும் செம்மொழி நிறுவனத்தின் அடிப்படைக் கற்றல் வள மையமாகச் செயலாற்றுகிறது. தற்போது இந்நூலகத்தில் 47,450 தமிழ் நூல்கள் உள்ளன. அவற்றுள் 4800 அரிய செம்மொழித் தமிழ் நூல்களும் 2200 மின்னூல்களும் அடங்கும். மேலும், 497 ஆய்வேடுகளும், மின்னாக்கம் செய்யப்பட்டுக் குறுவட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சங்க இலக்கியம் தொடர்பான ஓலைச்சுவடிகளும், பழந்தமிழ் தொடர்பான காணொளிகளின் தொகுப்புகளும் இந்நூலகத்தில் உள்ளன. செம்மொழி நிறுவன வெளியீடுகளையும் ஆவணங்களையும் பாதுகாத்துப் பராமரிக்கும் ஆவணக் காப்பகமாகவும் இந்நூலகம் திகழ்கிறது

நோக்கம்:

செம்மொழித் தமிழ் இலக்கியத்தையும் அதுசார்ந்த களங்களையும் ஆய்வுசெய்வதற்கு வசதியான, எளிதில் அணுகக்கூடிய, பயனுள்ள எண்ணிம நூலக அமைப்புடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த நூலகச் சேவையினை வழங்குதல் இந்நூலகத்தின் நோக்கமாகும்.  

இலக்கு:

படைப்பாற்றலை வளர்க்கும் வகையிலும் மனித அறிவு முழுவதையும் இலவசமாக அணுகும் வகையிலும் பழந்தமிழுக்கான மின்நூலகத்தை உருவாக்குதல்.  

சேகரிப்புகள்:

  பாவேந்தர் நூலகம் கடந்த பதினைந்து ஆண்டுக் காலப்பகுதியில் செம்மொழித் தமிழ் இலக்கியத்திலும் அது சார்ந்த துறைகளிலும் குறிப்புதவிப் பொருட்களையும் சிறப்புத் தகவல் வளங்களையும் பெற்றுள்ளது. நூலகத் திரட்டுகள் அச்சு, அச்சு சாராதவை, மின் வளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. மூலம், உரை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனத் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சேகரிப்புகள் இந்நூலகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  நூலக வேலை நேரம்:

  சனி, ஞாயிற்றுக் கிழமைகள், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்துத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாவேந்தர் நூலகம் இயங்கும்.

  நூலகப் பகுதி:

  Pāvēntar Library , Chennai.
   

நூலக உடைமைகள்:

வ.எண் விவரங்கள் நூல்கள் / பருவ இதழ்களின் எண்ணிக்கை
1 நூல்கள் (அச்சு வடிவம்) 47,450
2 ஆய்வேடுகள், ஆய்வறிக்கைகள், திட்ட அறிக்கைகள் 721
3 அச்சு வடிவம் அல்லாதவை / மின் வளங்கள் 3923
4 இதழ்த் தொகுதிகள் 1496

நூலக வகைப்பாடு:

தமிழ்ச் செவ்விலக்கிய நூல்கள் நாற்பத்தொன்றும் டூவி பதின்ம வகைப்பாட்டின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.

நூலக உடைமைகளுக்குப் பட்டைக் குறியீடிடல்:

நூல்களின் தரவுத்தளம் பட்டைக் குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்கப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை: 34,500.

நூலகத்திலுள்ள வசதிகள்:

 • வாசகர்களுக்கான இருக்கைகள்.
 • முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகம்.
 • நூலகப் பயனர்கள் அனைவருக்கும் இணைய வசதி.
 • நூல்களைப் படியெடுத்தல், ஒளிவருடல், அச்சிடல் ஆகிய வசதிகள்.
 • நூல்களுக்கான இணையவழிப் பொது அணுகல் பட்டியல் (OPAC) சேவை.
 • எண்ணிமம் செய்யப்பட்ட செவ்வியல் தமிழ் நூல்களை / சுவடிகளை நூலக வளாகத்திற்குள்ளேயே பயன்படுத்தும் வசதி.