நூலக விதிகள்

பொதுவான விதிகள்:

  • வாசகர்கள் தங்களின் உடைமைகளை நூலகத்திற்கு வெளியில் உள்ள உடைமைக் காப்பகத்தில் வைக்கவேண்டும்
  • நூலகத்திற்குள் நுழைவதற்குமுன் சேவை முகப்பில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் உங்கள் பெயர், முகவரியினை எழுதிக் கையொப்பமிட வேண்டும்
  • வாசகர்கள் தங்களின் சொந்த நூல்களையோ பாடப் புத்தகங்களையோ நூலகத்திற்குள் கொண்டுவர அனுமதி இல்லை
  • நூலகத்தில் அமைதி காக்க வேண்டும்
  • நூலகத்திற்குள் எந்த விவாதத்திற்கும் அனுமதி இல்லை
  • நூலகத்திற்குள் செல்பேசியைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது
  • நூலக வளாகத்திற்குள் உண்பதற்கு அனுமதி இல்லை

குறிப்புதவிப் பிரிவு:

  • இப்பிரிவில் கையேடுகள், கலைக்களஞ்சியங்கள், அகராதிகள் முதலான நோக்கீட்டு நூல்கள் உள்ளன. அவை குறிப்புதவிப் பயன்பாட்டுக்கு மட்டுமே உரியவை. நூலகப் பயனர் இந்த வளங்களை நூலகத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும்.

இதழ்கள் பிரிவு:

  • இப்பிரிவில் பத்திரிகைகளும் பொது இதழ்களும் துறை வாரியாகக் காட்சி அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன. பழைய இதழ்கள் அலமாரி இழுப்பறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடம் செய்யப்பட்ட பருவ இதழ்களின் தொகுதிகள் நூலகத்திற்குள் குறிப்புதவிக்காக மட்டுமே நிலைஅடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன.