நூலக மேலாண்மைக் குழு

அறிமுகம்:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பின்வரும் கடமைகளும் பொறுப்புகளும் கொண்ட நூலகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நூலகக் குழுவின் கடமைகள்:

  • நூலகத்தை இயக்குவது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுத்தல்
  • நூலகத்தின் வேலை நேரத்தை நிர்ணயித்தல்
  • நூலகத்திற்குத் தேவையான அறைகலன்களையும் ஏனைய பொருள்களையும் வாங்குவதற்கான முடிவு எடுத்தல்
  • அயல்நாட்டு இதழ்களையும் இந்திய இதழ்களையும் வாங்குவதற்கான முடிவு எடுத்தல்
  • நூலகக் குழு மூலமாகவோ நூலகக் குழுவினால் அமைக்கப்பட்ட துணைக்குழு மூலமாகவோ நூலகத்திற்குத் தேவையான நூல்களையும் இதழ்களையும் வாங்குதல்

உறுப்பினர் பட்டியல்:

வ.எண் பெயர்
1 இயக்குநர் / தலைவர்
2 ஆராய்ச்சி அலுவலர் / உறுப்பினர்
3 தொழில்நுட்பப் பணியாளர்கள் / உறுப்பினர்
4 பதிவாளர் / உறுப்பினர் செயலர், நூலகக் குழு
5 உதவி நூலகர்