இயக்குநர் வாழ்த்துரை

Prof.R.chandrasekaran

பேராசிரியர் இரா. சந்திரசேகரன்
இயக்குநர்

செவ்வியல் தமிழுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த இணையத் தளத்தை உங்களிடம் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். செவ்வியல் தமிழ் இலக்கியங்களையும் அவைசார்ந்த அறிவுக்களங்களையும் ஆய்வுசெய்வதற்கு ஏதுவான, எளிதில் அணுகத்தக்க, பயனுறு மின் நூலக அமைப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நூலகச் சேவையினை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

இந்த மின் நூலகத்தின் முதன்மை நோக்கமாவது தொடக்ககாலம் முதல் பொது ஆண்டு 600 வரையில் பன்னரும் புலவர்கள் பாடிய எண்ணரும் பாக்களையும் அப்பாக்களுக்கெழுந்த உரைகளையும் ஆய்வுகளையும் மொழியாக்கங்களையும் திரட்டி எண்ணிம மயமாக்குவதாகும்.

எங்கள் நூலகத்தை நீங்கள் யாவரும் பயன்படுத்த விரும்புகிறோம். மேலும் இந்நூலகத்தை மேம்படுத்துவது குறித்த உங்கள் மேலான கருத்துகளையும் பரிந்துரைகளையும் வரவேற்கிறோம்.

நன்றி!
பெருகும் அன்புடன்
பேராசிரியர் இரா. சந்திரசேகரன்
இயக்குநர்