குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு அறிமுகம்:-

இது 261 அடிகளைக் கொண்டது, ஆசிரியப்பாவால் ஆகியது. ஆரிய அரசன் பிரகத்தத்தனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்தும் பொருட்டுக் கபிலர் இந்நூலை இயற்றினார். இதனைப் பெருங்குறிஞ்சி என்றும் நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

இந்நூல் களவொழுக்கத்தினைச் சிறந்த முறையில் விளக்குகிறது. களவியல்சார் களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி ஆகியவையும் எளித்தல், ஏத்தல் என வரும் அறத்தொடு நிற்கும் முறைமைகளில் பெரும்பாலானவையும் இதில் இடம்பெற்றுள்ளன. செங்காந்தட்பூ முதலாக எருக்கம்பூ ஈறாக 99 பூக்களைப் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகிறது.

குறிஞ்சிப்பாட்டு தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 குறிஞ்சிப்பாட்டு (உரையாசிரியர்: நச்சினார்க்கினியர்; பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்) 1908 உரை