பத்துப்பாட்டு அறிமுகம்:-
மிகுந்த அடிகளையுடைய பத்துச் செய்யுள் நூல்களின் தொகுதியே பத்துப்பாட்டு. இதில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியவை. மற்ற ஏழு நூல்களும் புறப்பொருள் பற்றியவை. ஏழனுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படையினைச் சார்ந்தவை. பத்துப்பாட்டு முழுவதற்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் பத்துப்பாட்டை 1889இல் முதன் முதலாகப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.