தொல்காப்பியம்

தொல்காப்பியம் அறிமுகம்:-

தமிழில் இன்றைக்கு முழுமையாகக் கிடைத்துள்ளனவற்றுள் தொல்காப்பியம் தொன்மை மிக்க இலக்கண நூலாகும். தமிழ் மொழியின் வளத்தையும் இலக்கியச் செழுமையினையும் எடுத்துக்காட்டும் இவ்வரிய மொழியியல் நூலினை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.

1610 நூற்பாக்களை உள்ளடக்கிய இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளை உடையது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டதாகும்.

பேச்சு மொழியிலும் எழுத்துமொழியிலும் வழங்கும் தமிழின் எழுத்து-ஒலிவடிவங்களையும் அவற்றின் பிறப்பையும் உருபொலியன் கட்டமைப்பையும் எழுத்ததிகாரம் கூறுகிறது. சொல்லதிகாரம் சொல்வகைமைகளையும் உருபியல் தொடரியல் கட்டமைப்புகளையும் பேசுகிறது. பொருளதிகாரம் அகப்புறக் கோட்பாடுகள் உள்ளடங்கிய கவிதையியலையும் யாப்பியலையும் உவமைகளையும் மெய்ப்பாடுகளையும் மொழி மரபியலையும் இயம்புகிறது.

தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்கள் (அகத்திணையியல் முதல் பொருளியல் வரை) ஆகியனவற்றிற்கு உரை எழுதியுள்ளார். சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்குப் (மெய்ப்பாட்டியல் முதல் மரபியல் வரை) பேராசிரியரின் உரை கிடைத்துள்ளது.

தொல்காப்பியம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட அதனுரையும் (பதிப்பாசிரியர்: மழவை மகாலிங்கையர்; வெளியீடு: கல்விக்கடல் அச்சுக்கூடம்) 1847 உரை
2 தொல்காப்பிய நன்னூல் (பதிப்பாசிரியர்: இ. சாமுவேல் பிள்ளை; வெளியீடு: கிறிஸ்துமதக்கியான விளக்கச் சங்கத்தார், சென்னை) 1858 மூலம்
3 தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை (பரிசோதித்தவர்: ஆறுமுக நாவலர்; பதிப்பாசிரியர்: சி.வை. தாமோதரம் பிள்ளை; வெளியீடு: புஷ்பரதச் செட்டியாரது கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னபட்டணம்) 1868 (விபவ - புரட்டாதி) உரை
4 தொல்காப்பியச் சேனாவரையம் (பதிப்பாசிரியர்: கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளை; வெளியீடு: வர்த்தமானதரங்கிணீ சாகை அச்சுக்கூடம்) 1868 (விபவ - கார்த்திகை) உரை
5 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை (பதிப்பாசிரியர்: திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியார்; வெளியீடு: அத்திநீயம் அன்ட் டேலிநீயூஸ் பிரான்ச் அச்சுக்கூடம், சென்னை) 1868 (விபவ - கார்த்திகை) உரை
6 தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பதிப்பாசிரியர்: சி.வை. தாமோதரம் பிள்ளை; வெளியீடு: தி ஸ்காட்டிஷ் பிரஸ், மெட்ராஸ்) 1885 (பார்த்திப - ஆவணி) உரை
7

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை (பரிசோதித்தவர்: ஆறுமுக நாவலர்; பதிப்பாசிரியர்: சி.வை. தாமோதரம் பிள்ளை; வெளியீடு: வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம்)

1886 (விய - ஆனி) உரை
8 தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பதிப்பாசிரியர்: சி.வை. தாமோதரம் பிள்ளை; வெளியீடு: விக்டோரியா ஜூபிலி யந்திரசாலை, சென்னபட்டணம்) 1892 (நந்தன ) உரை
9 தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (அகத்திணையியல், புறத்திணையியல்) பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் (பதிப்பாசிரியர்: ராவ் பஹதூர் ச. பவானந்தம் பிள்ளை; வெளியீடு: மினெர்வா அச்சுக்கூடம், சென்னை) 1916 உரை
10 தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரியருரையுடன் (பதிப்பாசிரியர்: ரா. இராகவையங்கார்; வெளியீடு: தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை) 1917 உரை
11 தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்) (பதிப்பாசிரியர்: ராவ் பஹதூர் ச. பவானந்தம் பிள்ளை; வெளியீடு: லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை) 1917 உரை
12 தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் - அகத்திணையியலும் புறத்திணையியலும் (பதிப்பாசிரியர்: வ.உ. சிதம்பரம் பிள்ளை) 1919 உரை
13 தொல்காப்பிய மூலம் (கருத்து, பாடபேதக் குறிப்புடன்) (பதிப்பாசிரியர்: பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்; வெளியீடு: பி.என். சிதம்பர முதலியார் அன் கோ, மதுரை.) 1922 (துந்துபி) மூலம்
14 தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் (பதிப்பாசிரியர்: கா. நமச்சிவாய முதலியார்; வெளியீடு: ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை.) 1922 மூலம்
15 ஆத்திரையர் பேராசிரியர் அருளிய தொல்காப்பியப் பொதுப்பாயிரம் மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்; வெளியீடு: ஸ்ரீ கோமளாம்பா பிரஸ், கும்பகோணம்) 1923 உரை
16 தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் (பதிப்பாசிரியர்: காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார்; வெளியீடு: ஸி. குமாசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை.) 1927 உரை
17 தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை (வெளியீடு: கரந்தைத் தமிழ்ச் சங்கம்) 1929 உரை
18 தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் (பதிப்பாசிரியர்: காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார்; வெளியீடு: ஸி. குமாசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை) 1931 உரை
19 தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் (களவியல், கற்பியல், பொருளியல்) (பதிப்பாசிரியர்: வ.உ.சிதம்பரம் பிள்ளை; வெளியீடு: வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை) 1933 உரை
20 தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம் (நச்சினார்க்கினியம்) (பதிப்பாசிரியர்: வையாபுரிப்பிள்ளை & ம.நா. சோமசுந்தரம்பிள்ளை; வெளியீடு: சாது அச்சுக்கூடம், சென்னை) 1934 (பவ - ஐப்பசி) உரை
21 தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் (மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல்) (பதிப்பாசிரியர்: வ.உ. சிதம்பரம் பிள்ளை; வெளியீடு: வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை) 1935 உரை
22 தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் (பதிப்பாசிரியர்: மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை; வெளியீடு: பவானந்தர் கழகம், சென்னை) 1941 உரை
23 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை - ஞா. தேவநேயப்பாவணர் அடிக்குறிப்புடன் (வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.) 1944 உரை
24 தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் (வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.) 1964 உரை
25 தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு (பதிப்பாசிரியர்: கே.எம். வேங்கடராமையா, ச.வே. சுப்பிரமணியன், ப.வெ. நாகராசன்; வெளியீடு: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம்) 1996 மூலம்
26 தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணருரை (பதிப்பாசிரியர்: கு. சுந்தரமூர்த்தி; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை.) 1963 உரை