குறுந்தொகை

குறுந்தொகை அறிமுகம்:-

ஆசிரியப்பா அமைப்பில் குறைந்த அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்டது என்பர். நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடைய பாடல்களைக் கொண்டவை. ஆயினும் விதிவிலக்காக 307ஆம் பாடலும் 391ஆம் பாடலும் 9 அடிகளைப் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட 402 பாடல்கள் இந்நூலில் உள்ளன.

இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனைக் குறித்துக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலிலுள்ள பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும் இறுதி 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகள் இன்று கிடைக்கவில்லை. இந்நூலை 1915இல் திருக்கண்ணபுரத்தலத்தான் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் முதன்முதலாகப் பதிப்பித்தார்.

குறுந்தொகை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 குறுந்தொகை மூலமும், திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கன் இயற்றிய புத்துரையும் (பதிப்பாசிரியர்: திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கன்; வெளியீடு:வித்யா ரத்னாகர அச்சுக்கூடம், வேலூர்) 1915 உரை
2 குறுந்தொகை மூலம் (பதிப்பாசிரியர்: சோ. அருணாசல தேசிகர்) 1933 மூலம்
3 குறுந்தொகை உ.வே.சா. உரையுடன் (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர், வெளியீடு: கேஸரி அச்சுக்கூடம், சென்னை) 1937 உரை
4 குறுந்தொகை பொ.வே. சோமசுந்தரனார் உரையுடன் (வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை) 1955 உரை