கைந்நிலை அறிமுகம்:-
திணைக்குப் பன்னிரண்டு பாடல்களாக அறுபது பாடல்களை உடையது இந்நூல். இதனால் இது ‘ஐந்திணை அறுபது’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 18 பாடல்கள் சொற்களும் அடிகளும் சிதைந்து காணப்படுகின்றன. முழுநூலும் கிடைக்கவில்லை.
இதை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இந்நூல் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளது. இந்நூல் 1931 ஆம் ஆண்டு அனந்தராமையரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. இதன் பாடல்களை இளம்பூரணர் போன்ற பழைய உரைகாரர்கள் எடுத்தாண்டுள்ளனர்.