மலைபடுகடாம்

மலைபடுகடாம் அறிமுகம்:-

இது 583 அடிகளையுடையது, ஆசிரியப்பாவால் ஆகியது. ஆற்றுப்படைகளுள் பெரியது. இதனைக் கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பர். பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன் பரிசில் பெறவிருக்கும் கூத்தனைப் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. யானைக்கு மலையை உவமையாகக் கூறியும் யானை பொழியும் மதநீரின் ஓசையை மலையில் தோன்றும் பல வகை ஓசைக்கு உவமை ஆக்கியும் மலைபடுகடாம் என்ற தொடரைக் கையாண்டமையால் இப்பாடல் மலைபடுகடாம் எனப் பெயர்பெற்றது.

இதில் பலவகை இசைக்கருவிகளின் பெயர்களும், யாழின் வருணனையும் மலையின் வளமும் மலைவாழ் குறவர்களின் விருந்தோம்பும் முறையும் மலையில் பிறக்கும் பல்வகை ஓசைகள் பற்றிய செய்திகளும் நன்னனது ஊரின் பெருமையும் அவன் தன்னை நாடி வந்த கூத்தர், விறலியர் முதலியோருக்குப் பரிசில் அளித்த வள்ளன்மையும் கூறப்படுகின்றன.

மலைபடுகடாம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பத்துப்பாட்டினுள் பத்தாவதாகிய மலைபடுகடாம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை) 1912 உரை