சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் அறிமுகம்:-

இது தமிழில் தோன்றிய முதல் காப்பியம். இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் வழங்கப்படும். இது தண்டமிழ் நிலமாண்ட மூவேந்தரையும் பற்றிக் கூறுகிறது. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்னும் மூன்றினையும் கருப்பொருளாகக் கொண்டு யாக்கப்பட்டது இக்காப்பியம்.

புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரின் கதையினை எடுத்தியம்புகிறது.

இந்நூலுக்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய பழைய உரையும் பிற்காலத்தில் அடியார்க்கு நல்லார் எழுதிய சிறந்த உரையும் உள்ளன.

சிலப்பதிகாரம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 சிலப்பதிகாரம் (பதிப்பாசிரியர்: தி.ஈ. ஸ்ரீநிவாஸராகவாசாரியார்; வெளியீடு: கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை) 1872 (சூன்) மூலம்
2 சிலப்பதிகாரம் முதலாவது புகார்க்காண்டம் (பதிப்பாசிரியர்: தி.ஈ. ஸ்ரீநிவாஸராகவாசாரியார்; வெளியீடு: ஊ. புஷ்பரத செட்டியாரவரவர்களது கலாரத்நாகரம் அச்சுக்கூடம்) 1876 மூலம்
3 சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் அடியார்க்குநல்லார் உரை (பதிப்பாசிரியர்: தி.க. சுப்பராய செட்டியார்; வெளியீடு: மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை) 1880 (விக்கிரம - சித்திரை) உரை
4 சிலப்பதிகாரம் - 13. புறஞ்சேரியிறுத்த காதை (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை) 1897 உரை
5 சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும் (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை ) 1920 (ரௌத்திரி) உரை
6 சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் (உரையாசிரியர்: சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார், வெளியீடு: புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்) 1946 உரை
7 சிலப்பதிகார மூலமும் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரையும் (பதிப்பாசிரியர்: வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியார்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை. 1953 உரை
8 சிலம்பின் தகுதி (ஆசிரியர்: மார்க்க பந்து சர்மா; வெளியீடு: தொல்காப்பியர் நூலகம், சென்னை.) 1946 ஆய்வு
9 நாடகச் சிலம்பு (ஆசிரியர்: கு. திருமேனி; வெளியீடு: இலக்கிய நிலையம், திருச்சிராப்பள்ளி.) 1966 நாடகம்
10 சிலம்பில் அவலம் (ஆசிரியர்: க. முத்துச்சாமி; வெளியீடு: அன்றில் பதிப்பகம்.) 1978 ஆய்வு
11 சிலப்பதிகாரம் காட்டும் தமிழகச் சமுதாய நிலை (ஆசிரியர்: நா. செயப்பிரகாசு; வெளியீடு: வான்மழைப் பதிப்பகம், சென்னை.) 1978 ஆய்வு
12 சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - பகுதி 1 - புகார்க்காண்டம் (உரையாசிரியர்: பொ.வே.சோமசுந்தரனார்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை.) 1979 உரை
13 சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - பகுதி 2 - மதுரைக்காண்டம் (உரையாசிரியர்: பொ.வே.சோமசுந்தரனார்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை.) 1979 உரை
14 சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - பகுதி 3 - வஞ்சிக்காண்டம் (உரையாசிரியர்: பொ.வே.சோமசுந்தரனார்; வெளியீடு: கழக வெளியீடு, சென்னை.) 1979 உரை
15 சிலப்பதிகாரத்து இசைத் தமிழ் (ஆசிரியர்: எஸ். இராமநாதன்; வெளியீடு: தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை.) 1981 ஆய்வு
16 வழி வழிச் சிலம்பு (ஆசிரியர்: சரளா ராசகோபாலன்; வெளியீடு: ஒளிப் பதிப்பகம், சென்னை.) 1986 ஆய்வு
17 சிலப்பதிகாரக் காட்சிகள் (ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்; வெளியீடு: பூரம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.) 1985 ஆய்வு
18 சிலம்பின் கற்பனை (ஆசிரியர்: மார்க்க பந்து சர்மா; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.) 1988 ஆய்வு
19 சிலம்பின் தனித்தன்மை (ஆசிரியர்: மார்க்க பந்து சர்மா; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.) 1988 ஆய்வு