கார்நாற்பது

கார்நாற்பது அறிமுகம்:-

கார்காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும் நாற்பது செய்யுள்களை உடைமையாலும் இந்நூல் கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது.

இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார். 40 வெண்பாக்களை மட்டும் கொண்டிருப்பதால் அகப்பொருளுக்குரிய கீழ்க்கணக்கு நூல்களில் இதுவே சிறியது.

இச்செய்யுள்கள் அனைத்தும் தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோருள் ஒருவர் கூறுவதாக உள்ளன. இச்செய்யுள்களில் முல்லைத்திணைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

கார்நாற்பது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 ககார் நாற்பது உரையுடன் (பதிப்பாசிரியர்: சண்முகசுந்தர முதலியார்; வெளியீடு: மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம்) 1875 - (மிதுனரவி) உரை
2 கார் நாற்பது மூலமும் கா.ர. கோவிந்தராஜ முதலியார் உரையும் (வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1917 உரை
3 கார் நாற்பது மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: பரங்கிப்பேட்டை கோ. இராமசாமிப் பிள்ளை; வெளியீடு: பி.இ. அச்சுக்கூடம், சென்னை) 1918 உரை
4 கார் நாற்பது மூலமும் கா.ர. கோவிந்தராஜ முதலியார் உரையும் (வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1924 உரை
5 கார் நாற்பது ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: பி. ராஜ்ஜா; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு