மணிமேகலை அறிமுகம்:-
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படும். இந்நூற்கதை சிலப்பதிகாரக் கதையோடு தொடர்புடையது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. அவளே இக்கதையின் தலைவி. இக்காப்பியத்தை இயற்றியர் சீத்தலைச் சாத்தானார் ஆவார். இவர் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்.
இந்நூல் விழாவறை காதை தொடங்கிப் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை வரை முப்பது காதைகளைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்தை ‘மணிமேகலை துறவு’ ‘முதற் சமயக் காப்பியம்’ ‘அறக்காப்பியம்’ என்றும் அழைப்பர்.
சிறைச் சீர்திருத்தம், பரத்தமை ஒழிப்பு, பசிப்பிணி அகற்றல், உடல் ஊனமுற்றோர்க்கு உதவுதல், மதுஒழிப்பு எனச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியமாக விளங்குகிறது. நகர் அமைப்பு, விழாக்கள், மக்கள் வாழ்க்கை, கலைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்நூலைப் ‘பண்பாட்டு வரலாற்றுக் காப்பியம்’ என்பர். இந்த நூலுக்குப் பழைய உரைகள் எதுவும் இல்லை.