களவழிநாற்பது அறிமுகம்:-
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றிக் கூறும் ஒரே நூல் இதுவாகும். ஏர்க்களம் பற்றியோ போர்க்களம் பற்றியோ பாடப்படுவது களவழி. களவழி நாற்பது என்னும் இந்நூல் போர்க்களம் பற்றியது. இதில் 41 வெண்பாக்கள் உள்ளன.
சோழன் செங்கணானோடு கழுமலம் என்னும் இடத்தில் போரிட்டுத் தோற்றதனால் சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையை மீட்கும் பொருட்டு அவன் நண்பர் பொய்கையார் பாடியது.
இந்நூலின்கண் உள்ள செய்யுள்களில் போர்க்களத்தோற்றம், நாற்படையில் யானைப்படையின் சிறப்பு, கார்த்திகைத் திருவிழா முதலிய செய்திகள் பேசப்பட்டுள்ளன.