ஐந்திணை ஐம்பது அறிமுகம்:-
ஐந்திணைகள் ஒவ்வொன்றிலும் பத்துப்பாட்டுகளாக மொத்தம் ஐம்பது பாடல்களைக் கொண்டிலங்குவதால் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்னும் பெயர்பெற்றது. இந்நூலாசிரியர் புள்ளி மாறன் பொறையனார்.
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வைப்புமுறையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. முல்லைத் திணையை முதலாகக் கொண்ட கீழ்க்கணக்கு நூல் இது மட்டுமேயாகும்.
பல நேரிசை வெண்பாக்களும், சில இன்னிசை வெண்பாக்களும் அமைந்து ஐந்திணையின் உரிப்பொருள்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது இந்நூல்.