மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி அறிமுகம்:-

மதுரையில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் காஞ்சியாகிய நிலையாமை ஒழுக்கத்தைக் கூறிய பாடல். இது பத்துப்பாட்டினுள் அளவால் மிகப் பெரியது. இதன் அடிகள் 782. வஞ்சியடி விரவிய ஆசிரியப்பாவால் ஆனது. இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

இந்நூலில் நெடுஞ்செழியன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று அவர்களுடைய அரண்களையும் காவல் மரங்களையும் அழித்து, தன்னைப் பணிந்தோர்க்கு அருள் செய்து, தன்னை மதியாரை அழித்து அவர் நாடுகளையும் அழித்த முறைகள், தலையாலங்கானத்தில் இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்ற செழியனின் ஆண்மை, பகைவரை வென்று கொணர்ந்த பொருட்களைக் குடிமக்களுக்கும் புலவர் முதலியோர்க்கும் பரிசில்களாக வாரி வழங்கிய வள்ளன்மை போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

மதுரைக்காஞ்சி தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பத்துப்பாட்டு ஆறாவது மதுரைக்காஞ்சி (உரையாசிரியர்: நச்சினார்க்கினியர்; பதிப்பாசிரியர்: உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: கேசரி அச்சுக்கூடம், சென்னை) 1931 உரை