புறநானூறு

புறநானூறு அறிமுகம்:-

இந்நூல் புறப்பொருள் பற்றிய நானூறு அகவல் பாக்களின் தொகுப்பாகும். இதனைப் புறம், புறப்பாட்டு என்ற பெயர்களாலும் அழைப்பர். இப்பாடல்களைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 157. இதற்குக் கடவுள் வாழ்த்தினைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாவரெனத் தெரியவில்லை. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. 4 அடி முதல் 40 அடிவரை உள்ள பாடல்கள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடல்களில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளும் அவற்றின் துறைகளும் பயின்றுவருகின்றன. இது, பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வேளிர்கள், கடையெழு வள்ளல்கள், புலவர்கள், மக்கள் வாழ்க்கை முறை, உணவு, உடை, விழாக்கள் முதலிய பல செய்திகளைப் புலப்படுத்தும் வரலாற்றுப் பெருநூலாகவும் தமிழர்களின் செந்நெறிப் பெட்டகமாகவும் திகழ்கிறது.

புறநானூறு தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 புறநானூறு மூலமும் உரையும் (பதிப்பாசிரியர் / பரிசோதித்தவர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை) 1894 உரை
2 புறநானூறு மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை) 1923 உரை
3 புறநானூறு மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை) 1935 உரை
4 புறநானூறு 1-200 பாட்டுக்கள் - ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன் (வெளியீடு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை) 1947 மூலம்