முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் அறிமுகம்:-

இந்நூலில் அகப்பொருள் பாடல்களும் புறப்பொருள் பாடல்களும் கலந்து காணப்படுகின்றன. இது தமிழ்கெழு மூவேந்தர்களாகிய சேரனுக்கு 900, சோழனுக்கு 900, பாண்டியனுக்கு 900 என 2700 பாடல்களைக் கொண்ட நூலாதலின் முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது என்பார் ரா. இராகவையங்கார். அவர் புறத்திரட்டு எனும் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற 108 வெண்பாச் செய்யுட்களைத் தொகுத்து முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் என்னும் பெயரில் வெளியிட்டார். கழக வெளியீட்டில் பழைய உரைகளிலிருந்து எடுக்கப்பட்ட 22 பாடல்களை அத்துடன் சேர்த்து 130 பாடல்களாக வெளியிட்டுள்ளனர்.

மூவேந்தர்களின் வீரம், குதிரை மறம், யானை மறம், நகரச்சிறப்பு, கொடைச்சிறப்பு, பகைவர் நாட்டழிவு ஆகியன இந்நூலில் பேசப்படுகின்றன. உலா இலக்கியம் மலர இந்நூலே வழிகாட்டி எனலாம். இந்நூலில் தனித்த ஓர் அரசனின் பெயரைச் சுட்டப்படாமல் குடிப்பெயர்கள் சுட்டப்படுகின்றன.

முத்தொள்ளாயிரம் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (105) (பதிப்பாசிரியர்: ரா.இராகவையங்கார்; வெளியீடு: செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை) 1905 மூலம்
2 முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (108) (பதிப்பாசிரியர்: ரா.இராகவையங்கார். வெளியீடு: செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை) 1935 மூலம்
3 முத்தொள்ளாயிரம் - வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன் (வெளியீடு: கழக வெளியீடு, சென்னை) 1946 உரை
4 முத்தொள்ளாயிரம் - டி.கே.சிதம்பரநாத முதலியார் எழுதிய உரைக்குறிப்புகளுடன் (வெளியீடு: பொதிகை மலைப் பதிப்பு, திருக்குற்றாலம் - தென்காசி) 1957 உரை
5 முத்தொள்ளாயிரம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: பி. பாண்டியன்; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2010 மொழிபெயர்ப்பு