முதுமொழிக் காஞ்சி அறிமுகம்:-
இந்நூல் மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பெற்றது. ஓர் அதிகாரத்திற்குப் பத்துப் பாடல் வீதம் 10 அதிகாரங்களில் 100 பாடல்களைப் பெற்றுள்ளது. பத்து அதிகாரங்களாவன: சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்ப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து.
ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் எனத் தொடங்கிப் பத்து அடிகளில் பத்து முதுமொழிகளைத் தரும். குறட்டாழிசை யாப்பினால் ஆனது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையைக் கொண்டது இந்நூல்.