அகநானூறு

அகநானூறு அறிமுகம்:-

அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பாடல்கள் 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டுள்ளமையாலும் கலித்தொகை நீங்கலான பிற தொகை நூலில் காணப்படும் பாடல்களைக் காட்டிலும் நெடியனவாக இருப்பதாலும் இதற்கு ‘நெடுந்தொகை’ என்ற பெயரும் உண்டு. முதல் 120 பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த 180 பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி 100 பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் அமைந்துள்ள முப்பெரும் பிரிவுகளை இந்நூலில் காணலாம். இப்பாடல்களைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 145.

இப்பாடல்களின் அமைப்பு முறையில் ஓர் ஒழுங்கு முறையினைக் காணமுடிகிறது. 1,3,5,7 என்னும் ஒற்றைப்படை எண் கொண்ட பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள். 2,8 என முடியும் எண்கொண்ட பாடல்கள் குறிஞ்சித்திணையைக் குறிப்பன. 4, 14 என நான்கில் முடியும் எண் கொண்ட பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்கள். 6, 16 முதலான ஆறில் முடியும் எண் பெற்றவை மருதத்திணையைக் குறிப்பன. 10, 20 எனப் பத்தில் முடியும் எண் பெற்றவை நெய்தல்திணையைக் குறிப்பன.

இதன்படி பாலைத்திணை 200, குறிஞ்சித் திணை 80, முல்லைத்திணை 40, மருதத்திணை 40, நெய்தல்திணை 40 என ஐந்திணைகளும் அகநானூற்றில் பாட்டெண்ணிக்கை பெறும்.

இந்நூலில் அகத்திணை ஒழுக்கங்கள், இயற்கை வருணனைகள், வரலாற்றுக் குறிப்புகள், குடவோலைத் தேர்தல் முறை, மணமுறை ஆகியவை பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

அகநானூறு தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார்; வெளியீடு: டாட்டா பிரிண்டிங் ஒர்க்ஸ், மெட்ராஸ்) 1923 (ருதிரோத்காரி) உரை
2 எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: சென்னை, மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார்; வெளியீடு: மெட்ராஸ் லா ஜர்னல் பிரஸ், மைலாப்பூர்) 1923 (ருதிரோத்காரி) உரை
3 எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும் (பதிப்பாசிரியர்: ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன்; வெளியீடு: கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர்) 1933 (ஸ்ரீமுக) உரை
4 அகநானூறு (உரையாசிரியர்: ந.மு.வேங்கடசாமி நாட்டார் & கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை; பதிப்பாசிரியர்: பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவாநாதன்; வெளியீடு: பாகனேரி த.வை.இ. தமிழ்ச்சங்க வெளியீடு) 1968 உரை