கலித்தொகை

கலித்தொகை அறிமுகம்:-

‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும் ‘கல்விவலார் கண்ட கலி’ என்றும் புகழப்படும் இந்நூலில் பாலை, குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை என்ற திணை அடிப்படையில் கடவுள் வாழ்த்தொடு 150 கலிப்பா யாப்பில் அமைந்த பாக்கள் காணப்படுகின்றன. அதில் பாலை பற்றிய 35 பாடல்களைப் பாடியவர் பெருங்கடுங்கோ. குறிஞ்சி பற்றிய 29 பாடல்களைப் பாடியவர் கபிலர். மருதம் பற்றிய 35 பாடல்களைப் பாடியவர் மருதனிளநாகனார். முல்லை பற்றிய 17 பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன். கடவுள் வாழ்த்துடன் ஐந்தாவதாகிய 33 பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். கடவுள் வாழ்த்துச் செய்யுள் சிவனைப் பற்றியது. கைக்கிளை, பெருந்திணை ஒழுக்கம் சார்ந்த பாடல்கள் இந்நூலில் மட்டுமே பயில்வது சிறப்பாகும். மேலும் பெரும்பான்மைப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் கட்டமைப்பில் அமைந்துள்ளன.

இந்நூலில் நாடகப் பாங்கில் பாடல்கள் காணப்படுகின்றன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

கலித்தொகை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 கலித்தொகை மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையுடன் (பதிப்பாசிரியர்: வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியார்; வெளியீடு: பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச்சங்க வெளியீடு) 1938 உரை