பரிபாடல்

பரிபாடல் அறிமுகம்:-

பரிந்துசெல்லும் ஓசையையுடைய பரிபாட்டால் ஆயினமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இந்நூல் பல்வகைப் பாவடிகளையும் ஏற்று வரும்; இசைநயம் வாய்ந்தது; இன்பம் நுதலி வருவதால் பொருட்பொலிவுடையது. 25 அடி முதல் 400 அடிவரையும் இப்பாடல் அமையும். இந்நூலுள் 140க்கு மேலுள்ள அடிகள் கொண்ட பாடல்கள் கிடைக்கவில்லை.

பரிபாடலில் தொடக்கத்தில் எழுபது பாடல்கள் இருந்தன. ஆனால் திருமாலுக்கு ஆறும், முருகனுக்கு எட்டும், வையைக்கு எட்டும் ஆக இருபத்திரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. புறத்திரட்டில் காணப்படும் இரண்டு பரிபாடல்களையும் சேர்த்து 24 பாடல்கள் இதன்கண் உள்ளன என்பர்.

ஆசிரியன் நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இளவெயினனார் முதலான பதின்மூன்று புலவர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர். நந்நாகனார், நல்லச்சுதனார் முதலான பத்து ஆசிரியர்கள் இப்பாக்களுக்கு இசை வகுத்துள்ளனர். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

பரிபாடல் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகர் இயற்றிய உரையும் (பதிப்பாசிரியர் உ.வே. சாமிநாதையர்; வெளியீடு: கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை) 1918 உரை