திணைமொழி ஐம்பது அறிமுகம்:-
திணையொன்றிற்குப் பத்துப் பாக்களாக அகத்திணை ஐந்துக்கும் ஐம்பது பாக்களைத் தன்பாற் கொண்டுள்ளதால் இந்நூல் திணைமொழி ஐம்பது எனும் பெயர்பெற்றது.
இதன் ஆசிரியர் சாத்தந்தையார் மகனார் கண்ணன் சேந்தனார்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வைப்புமுறையில் பாடப்பட்டுள்ள இந்நூலுள் 46 இன்னிசை வெண்பாக்களும், 4 நேரிசை வெண்பாக்களும் உள்ளன.