பட்டினப்பாலை அறிமுகம்:-
இது 301 அடிகளால் ஆனது. பெரும்பாலும் வஞ்சியடிகளால் அமைந்து ஆசிரிய அடிகளால் முடிகிறது. இதனை வஞ்சி நெடும்பாட்டு என்றும் பாலைப்பாட்டு என்றும் அழைப்பர். வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, ‘தலைவியைப் பிரிந்து வாரேன்’ என்று செலவழுங்கிக் கூறும் கூற்றாகச் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இதற்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்றார் என்று கலிங்கத்துப்பரணியும் சங்கரசோழன் உலாவும் கூறுகின்றன.
இதில் சோழநாட்டின் பெருமை, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, கரிகால் வளவனின் போர் வீரம் போன்றவை சிறப்பித்துக் கூறப்படுகின்றன.