பெரும்பாணாற்றுப்படை அறிமுகம்:-
இந்நூல் 500 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்தது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. பேரியாழை வாசிக்கும் பரிசில் பெற்ற பெரும்பாணன் பரிசில் பெற இருக்கும் பெரும்பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது. இந்நூலினைப் பாணாறு என்றும் வழங்குவர்.
இதனுள் யாழின் வருணனை, காஞ்சியில் ஆண்டுவந்த இளந்திரையனின் ஆட்சிச் சிறப்பு, வீரம், கொடை முதலியவற்றின் பெருமை, அவனுடைய நாட்டின் இயல்பு, உப்பு வணிகர் இயல்பு, எயிற்றியர் செயல், கலங்கரை விளக்கத்தின் மாண்பு, பாணர், விறலியர் ஆகியோர் இளந்திரையனிடத்தே பரிசில் பெறுதல் முதலிய பல செய்திகள் காணப்படுகின்றன.