இன்னா நாற்பது அறிமுகம்:-
வாழ்க்கைக்கு இன்னது துன்பம் தரும் என்று கூறும் நாற்பது செய்யுள்களால் ஆன நூல் இது. இந்நூலை இயற்றியவர் கபிலர். சங்ககாலக் கபிலர் கள்ளுண்ணலையும் ஊனுண்ணலையும் ஏற்றுப் பாடியுள்ளார். ஆனால் இந்நூலாசிரியர் அவற்றை மறுத்துள்ளமையால் இவ்விருவரும் வெவ்வேறானவர் என்பது விளங்கும். இவர் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய பல கடவுளரையும் கடவுள் வாழ்த்தில் போற்றியுள்ளார்.
கடவுள் வாழ்த்தோடு 41 பாடல்களைக் கொண்டுள்ளது இந்நூல். துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் இந்நூலுள் 164 இன்னாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. எக்காலத்துக்கும் பொருந்தும்படியான அறநெறிகள் கூறப்பட்டுள்ள இந்நூலில் தனிமனித ஒழுக்க நெறியை வலியுறுத்திச் சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் பல கருத்துகள் காணப்படுவது சிறப்பு.