இனியவை நாற்பது

இனியவை நாற்பது அறிமுகம்:-

இன்னது இன்னது இனியவை எனக் கூறும் 40 பாடல்களைப் பெற்றிருப்பதால் இந்நூலுக்கு இனியவை நாற்பது எனப் பெயரிட்டுள்ளனர். இந்நூலை இனியது நாற்பது, இனிது நாற்பது, இனியன நாற்பது என்றும் வழங்குவர். இந்நூலை இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். இந்நூலின் கடவுள் வாழ்த்தில் திருமால், சிவன், நான்முகன் ஆகிய மும்மூர்த்திகளும் போற்றப்பெற்றுள்ளனர்.

கடவுள் வாழ்த்தைச் சேர்த்து 41 வெண்பாக்கள் உள்ள இந்நூலில் 127 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.

இனியவை நாற்பது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 இனியது நாற்பது மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: ரா. இராகவையங்கார்; வெளியீடு: செந்தமிழ்ப் பிரசுரம்) 1903 உரை
2 இனிது நாற்பது மூலமும் கா.ர. கோவிந்தராஜ முதலியார் உரையும் (வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1928 உரை
3 இனியவை நாற்பது இனிய உரை (உரையாசிரியர்: சுந்தர சண்முகனார்; வெளியீடு: புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி ) 1987 உரை
4 இனியவை நாற்பது ஆங்கில மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: பி. ராஜ்ஜா; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு