நற்றிணை அறிமுகம்:-
இந்நூலை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர். அகப்பொருள் பற்றிப் பேசும் இந்நூல் கடவுள் வாழ்த்தொடு 401 பாடல்களைக் கொண்டுள்ளது. ஆசிரியப்பாவால் ஆன இப்பாக்கள் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் உடையவை; 275 புலவர்களால் பாடப்பெற்றவை.
நற்றிணையைத் தொகுத்தவர் யார் எனத் தெரியவில்லை, தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் திருமாலைக் குறித்துக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914இல் உரையுடன் இந்நூலைப் பதிப்பித்தார்.