பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை அறிமுகம்:-

கரிகாற் பெருவளத்தானைப் புரவலனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் பாடிய ஆற்றுப்படை இது . 248 அடிகளைக் கொண்டது இந்நூல். வஞ்சியடிகள் இடையில் வந்த ஆசிரியப்பாவால் ஆகியது. பரிசில் பெறப்போகும் பொருநனைப் புரவலனிடம் பரிசில் பெற்ற பொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளதால் பொருநராற்றுப்படை எனப்பட்டது. இந்நூலில் பொருநர்கள் இயல்பும் பாலை யாழின் தன்மையும் பாலைப்பண்ணை இசைப்பதால் ஆறலைக்கள்வர் தம்முடைய கொடுஞ்செயலை மறந்து அன்புடையவராவர் என்பதும் கூறப்பட்டுள்ளன.

மேலும், விறலியர் முடிமுதல் அடிவரை வருணிக்கப்படுதலும் கரிகாற்பெருவளத்தானின் பண்புகளும் அவன் இளமையில் வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து சேர பாண்டியர்களை வென்றமையும் பரிசிலர்க்குத் தேர், யானை போன்றவற்றைக் கொடுக்கும் வழக்கமும் பொருநர் பொற்றாமரை பெறுதலும் விறலியர் பொன்னரி மாலைகள் பெறுதலும் கூறப்பட்டுள்ளன.

பொருநராற்றுப்படை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பொருநராற்றுப்படைப் பொருள் விளக்கம் (உரையாசிரியர்: கா.ஸ்ரீ. கோபாலாசாரியார் & வா. மகாதேவமுதலியார்; வெளியீடு: கார்டியன் அச்சியந்திர சாலை, சென்னை) 1907 உரை /Commentary
2 பத்துப்பாட்டு இரண்டாவது பொருநராற்றுப்படை (உரையாசிரியர்: நச்சினார்க்கினியர்; பதிப்பாசிரியர்: உ.வே. சாமிநாதையர், வெளியீடு: கேசரி அச்சுக்கூடம், சென்னை) 1931 உரை