நாலடியார்

நாலடியார் அறிமுகம்:-

நான்கு அடி வெண்பாக்களால் ஆன இந்நூல் ஆர் விகுதி பெற்று நாலடியார் எனப் பெயர் பெற்றது. இந்நூலினை நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம் என்னும் பெயர்களாலும் அழைப்பர். இந்நூல் சமண முனிவர்களால் பாடப்பட்ட தொகை நூலாகும். திருக்குறளோடு ஒப்ப வைத்து இந்நூலைப் பாராட்டுவர். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்பன அப்பாராட்டு மொழிகள்.

நாலடியாரில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால்களும் 40 அதிகாரங்களும் உள்ளன. ஒவ்வொரு அதிகாரமும் திருக்குறளைப் போலவே பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும். இந்நூலுக்குத் தருமர், பதுமனார் முதலியோர் உரை எழுதியுள்ளனர்.

நாலடியார் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலம் (உரையாசிரியர்: கோமளபுரம் - இராசகோபாலப் பிள்ளை; மொழிபெயர்ப்பாளர்: கல்குளம் - குப்புசாமி முதலியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு); வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை) 1903 உரை & மொழிபெயர்ப்பு
2 நாலடியார் (உரையாசிரியர்: களத்தூர் வேதகிரி முதலியார்; வெளியீடு: பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை) 1913 உரை
3 சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் தெளிபொருள் விளக்கமும் (உரையாசிரியர்: வை.மு. சடகோபராமாநுஜாசாரியார் & சே. கிருஷ்ணமாசாரியார்; வெளியீடு: ஸ்ரீ கணேச அச்சுக் கூடம், சென்னை) 1914 உரை