நான்மணிக்கடிகை அறிமுகம்:-
நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலன் போல இந்நூலின் ஒவ்வொரு பாடலும் நான்கு அரிய கருத்துகளைக் கொண்டுள்ளதால் நான்மணிக்கடிகை என்று பெயரிடப்பட்டது. இதனைப் பாடியவர் விளம்பி நாகனார்.
கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் இரண்டும் மிகைப்பாடல் ஒன்றையும் சேர்த்து இந்நூலில் காணப்படும் மொத்த வெண்பாக்கள் 104. இதன் பின்பு வந்த பல அற நூல்கள் மிகுந்த அளவில் இந்நூலின் வழிப்பட்டு அமைந்திருத்தல் இதன் உயர்வுக்குச் சான்றாகும்.