நெடுநல்வாடை

நெடுநல்வாடை அறிமுகம்:-

இந்நூல் 188 அடிகளை உடையது, ஆசிரியப்பாவால் அமைந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரனார் பாடியது. அகப்பொருள் தழுவிய செய்திகள் இந்நூலில் பெரிதும் காணப்பட்டாலும் ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ எனப் பாண்டியனது அடையாளப் பூவாகிய வேம்பைக் கூறினமையின் இந்நூல் அகத்திணை நூலாகாமல் புறத்திணையாகவும் இதனை வாகைத்திணையுட் கூறிய கூதிர்ப்பாசறை எனும் துறையைச் சார்ந்ததாகவும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

அரசி இருக்கும் அரண்மனை அமைப்பு, அரண்மனை வாயில், முற்றம், அந்தப்புரம், அரசி துயிலும் கட்டிலின் சிறப்பு, புனையா ஓவியம் போல் அரசி இருத்தல், பாசறையில் அரசன் புண்பட்ட வீரரைக் கண்டு ஆறுதல் சொல்லுதல், கொற்றவை வழிபாடு முதலியவை இதில் சித்திரிக்கப்படுகின்றன.

நெடுநல்வாடை தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், ஏழாவது நெடுநல்வாடை (பதிப்பாசிரியர்: உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: கேசரி அச்சுக்கூடம், சென்னை) 1931 உரை